நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அமரர் மாதுலுவாவே சோபித தேரரினால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இன்னும், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சோபித தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறும், தேர்தல் முறைமையை மாற்றி அமைக்குமாறும் சோபித தேரர் வலியுறுத்தி வந்ததாக ஜனாதிபதி அவரது உரையில் சுட்டிக்காட்டினார்.

விரைவில் புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.