ரஷ்ய அதிபர் புட்டினுக்குக் கைது ஆணை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு (Vladimir Putin)எதிராக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையைப் பிறப்பித்திருக்கிறது.
உக்ரேனில் அவர் போர்க்குற்றம் புரிந்ததாக அந்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டுகிறது.உக்ரேனில் இருந்து சிறுவர்கள் சட்டவிரோதமாக ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் கூறுகிறது.
அதிபர் புட்டினே அதற்குப் பொறுப்பு என்று நீதிமன்றம் சொல்கிறது.உக்ரேனில் ரஷ்யா பெரிய அளவில் போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதற்கு மறுநாள் அதிபர் புட்டினுக்கு எதிரான கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கும் உடன்பாட்டில் கையெழுத்திடாததால் அந்த நீதிமன்றத்துக்குப் பதில் சொல்லத்தேவையில்லை என்று ரஷ்யா கூறியது.உக்ரேனில் போர்க் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் ரஷ்யா சொல்கிறது.