இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரான டில்ஷானை வீழ்த்தியதை மேற்கிந்திய தீவுகள் அணியின் பொல்லார்ட் வித்தியாசமாக கொண்டினார்.
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது.
இதன் முதல் டி20 போட்டியில் டில்ஷான் 56 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இவரது விக்கெட்டை பொல்லார்ட் தான் கைப்பற்றினார்.
பவுண்டரிகளாக விளாசிக் கொண்டிருந்த டில்ஷானுக்கு யார்க்கராக ஒரு பந்து வீசினார் பொல்லார்ட். அதை வித்தியாசமாக ஆட முற்படும் போது டில்ஷான் பவுல்ட் ஆனார்.
டில்ஷானின் இந்த விக்கெட்டை வெற்றிலை போடுவது போன்று கை செய்கையால் செய்து காண்பித்து கொண்டாடினார் பொல்லார்ட்.
நேற்று நடந்த 2வது டி20 போட்டியிலும் டில்ஷான் (52) அரைசதம் விளாசினார்.
ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி அந்தப் போட்டியில் 23 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது.
இரண்டு டி20 போட்டிகளிலும் அரைசதம் அடித்த டில்ஷான் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.