(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசு ஊழியர்களுக்கு எதிர்ரும் திங்கட்கிழமை சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளும் அன்றைய தினமே வழங்கப்படும் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரு மாதங்களிலும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சற்று முன்னர் தெரிவித்தார்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 09 முதல் ஏப்ரல் 25 வரை அந்த அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பளம் வழங்கப்படும்.