இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் (safety locker) இருந்த 50 இலட்சம் ரூபா பணம் மாயமாக மறைந்தது _ பொலிஸார் விசாரணை

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் (safety locker) இருந்த 50 இலட்சம் ரூபா பணம் மாயமாக மறைந்தது _ பொலிஸார் விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் இருந்த ஒரு தொகை பணம் காணாமல் போயுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் இன்று (11) பிற்பகல் சென்றிருந்ததாகவும், பின்னர், மீண்டும் ஒருமுறை சரிபார்த்து வருவதாக கூறி பொலிஸில் இருந்து திரும்பிச் சென்றதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும் கோட்டை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்திய வங்கி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன