பாடசாலை பேருந்து ஒன்று விபத்து!

பாடசாலை பேருந்து ஒன்று விபத்து!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கேகாலை நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற அரச பேரூந்து ஒன்று அரநாயக்க நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​கேகாலை மாற்று வீதியில் கண்டியிலிருந்து கேகாலை நகரம் நோக்கிப் பயணித்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

காரைப் பார்த்ததும் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை வீதியின் இடது பக்கம் செலுத்தியுள்ளார்.

ஆனால் வேகமாக வந்த கார் பேருந்தின் முன் வலது பக்கம் மோதியதில், பேருந்தின் உள்ளே இருந்த மாணவிகள் பேரூந்தினுள் விழுத்து காயம் அடைந்தனர்.

பேருந்தில் பயணித்த 12 மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் காரின் சாரதி ஆகியோர் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும், சாரதியும் தனக்கு தூக்கம் வந்ததாக ஒப்புக்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.