பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ? புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றது பாதுகாப்பு அமைச்சு

பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ? புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றது பாதுகாப்பு அமைச்சு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மத்திய மாகாணத்தில் உள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு சுமார் 2.45 மணியளவில் அழைப்பு கிடைத்தது என்றும் இதனை அடுத்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பான தகவல் கிடைப்பதற்கு முன் உளவுத்துறை தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என அலவத்துகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை வெடிகுண்டு மிரட்டல் குறித்து உளவுத்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.

தற்போது வரை, பள்ளிவாசலுக்கு அருகாமையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது அச்சுறுத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டதாகவோ எந்த தகவலும் இல்லை.

மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.