பால்மா வகைகளின் விலைகளை மேலும் குறைக்க நிறுவனங்கள் இணக்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால்மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்வாறு இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சுக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறித்த பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.