ஸஹ்ரானின் வண்ணாத்துவில்லு தோட்டத்தில் அதிரடிப்படையினர் இருவர் கைது!

ஸஹ்ரானின் வண்ணாத்துவில்லு தோட்டத்தில் அதிரடிப்படையினர் இருவர் கைது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுக்குச் சொந்தமான புத்தளம், வண்ணாத்தவில்லு தவில்லுவ, லாக்டோ தோட்டத்தில்  உள்ள  இடம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர், இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

புதையலை  பெற்றுக்கொள்வதற்காக யாகம் செய்ததாகக் கூறப்படும் பூசகர் சோதனை நடத்தப்பட்டபோது தப்பிச் சென்றதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய நபரை கைதுசெய்ய விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருணாகல் முகாமை சேர்ந்த அதிரடிப்படையினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதுளை தல்தென பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.