மேலும் சில நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கன் நிறுவனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.
மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு 26 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளதுடன், 2022.10.21 ஆம் திகதி வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவது பற்றிய முன்னேற்றம் தொடர்பில் இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கன் நிறுவனம் எதிர்வரும் 27 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 28 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை மே மாதம் 09 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதுடன், 2023.03.23 ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவது பற்றிய முன்னேற்றம் தொடர்பில் இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளது.