அனுராதபுர கடைத் தொகுதியில் பாரிய தீப்பரவல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனுராதபுரம் சந்தைப் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கடை தொகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நாட்களில் நாட்டில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருவதால், தீ வேகமாக பரவியதாகவும், ஒரு கடையில் பரவிய தீ அருகில் உள்ள பல கடைகளுக்கும் பரவியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்