வர்த்தகரின் கண்களில் மிளகாய் தூள் வீசி பணம் கொள்ளையிட்ட பெண்கள்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்துருகிரிய பகுதியில் கோழி இறைச்சி வர்த்தகர் ஒருவரின் கண்களில் மிளகாய் தூளை வீசி பணத்தை கொள்ளையிட்ட இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகருக்கு சொந்தமான லொறியின் சாரதி, வர்த்தகரின் மனைவி மற்றும் பிரிதொரு பெண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகர் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் லொறியில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவசிய தேவை கருதி வாகனத்தை நிறுத்திய சந்தர்ப்பத்திலேயே வர்த்தகருக்கு மிளகாய் தூள் வீசப்பட்டுள்ளது.
அத்துடன் வர்த்தகரிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.