5 மில்லியன் மாயம் – விசாரணைக்கு மத்திய வங்கி ஆதரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது, இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் ரூ. 5 மில்லியன் பெறுமதியான (ரூ. 5,000 நாணயத்தாள் வகை) காசுக்கட்டு குறைவடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக உள்ளக ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.
பொலிஸ் விசாரணைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி எடுத்து வருகின்றது.
பொலிஸ் அதனுடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் அதன் ஆதரவினை வழங்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.