அதிகாரிகளை ஏமாற்றிய நபர் கைது!

அதிகாரிகளை ஏமாற்றிய நபர் கைது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாதுகாப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளராகக் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான குறித்த நபர் சிலாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.அதனை தொடர்ந்து சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.