தேசிய கண் வைத்திய சாலை: நாளை முதல் சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு,தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (24) முதல் சத்திரசிகிச்சைகள் வழமை போன்று இடம்பெறும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சத்திரசிகிச்சையின் பின்னர் பல நோயாளிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அண்மையில் தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘பிரெட்னிசோலோன்’ என்ற கண் சொட்டு மருந்தின் பயன்பாடு, இந்த சிக்கல்களை ஏற்படுத்தியதாக கண்டறியப்பட்டது.
இதன் மூலம், சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய, பிரெட்னிசோலோன் (Prednisolone) பாவனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் விசேட விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை முதல் வழமை போன்று கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்