தொடர்ந்தும் கொட்டி கொட்டி என்று கூறி தட்டிப் பணித்தால் நாட்டுக்கு நாசம் சாணக்கியன் எம்.பி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் மக்களின் பிரச்சினைகளை சபையில் எழுப்புகின்ற பொழுது, புலி புலி என்று கோஷம் எழு ப்பப்படுகிறது. தமிழ் மக்களுக்காக நாங்கள் சந்தோஷப்படுகின்றேன் என சாணக்கியன் எம்பி சபையில் தெரிவித்தார்.
“ஆனால், கொட்டி கொட்டி என்று கூறி தட்டிப்பணிக்கும் நடவடிக்கையை நீங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பீர்களானால் நாட்டுக்கு நாசம் என்பதை மறந்து விடாதீர்கள்” எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் உரையாற்றும்போது கூறினார்.