பாடசாலை காலணிகள், புத்தகப்பை விலைகள் குறைகின்றன !

பாடசாலை காலணிகள், புத்தகப்பை விலைகள் குறைகின்றன !

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாடசாலை மாணவர்களின் காலணிகள் மற்றும் பைகளின் விலையை 500 முதல் 1000 ரூபா வரை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (25) மாலை நிதியமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் புத்தகப்பை உற்பத்தியாளர்கள், காலணி உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால், பாடசாலை பைகள் மற்றும் காலணி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், இதன் பயனை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குமாறும் உற்பத்தியாளர்களிடம் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மே 9ஆம் திகதிக்குப் பிறகு புத்தகப்பைகள் மற்றும் காலணிகளின் விலையை 500 முதல் 1000 ரூபாய் வரை குறைக்க உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.