இடமாற்றத்திற்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அஜித் ரோஹனவிடமிருந்து கடிதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தனது இடமாற்றம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தம்மை இடமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன்படி, அவரை கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொது பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அனுப்பியுள்ள கடிதத்தில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அனுப்பியுள்ள கடிதத்தில் அமைச்சின் தீர்மானம் தீங்கிழைக்கும், தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளதுடன், தாம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவிற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது இடமாற்றம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆராய்ந்தால் நன்றியுடையவனாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிரேஷ்ட டிஐஜிக்களின் இடமாற்றத்தை அங்கீகரிக்கும் அதிகாரத்தை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கவில்லை.