அஜித் ரோஹண குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானம்!

அஜித் ரோஹண குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய அஜித் ரோஹணவை கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யாமல் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களினால் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிதத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன