சாள்ஸ் மன்னரின் கையை, வலுக்கட்டாயமாக பிடித்த ரணில் சில்மிஷம் செய்தாரா..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு தினத்தன்று அதிபர் ரணில் விக்ரமசிங்க, சார்ள்ஸ் மன்னரின் கையைப் பிடித்து சில்மிஷம் செய்ததாக பிரஜை சக்தி அமைப்பின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
சாள்ஸ் மன்னரின் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து அவரை இலங்கைக்குக் கொண்டுவர அதிபர் முயற்சிப்பதாகத் தோன்றுவதாகவும் அவர் கூறினார்.
அப்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து மன்னர் சாள்ஸ் தப்பிப்பது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.