நில்வலா கங்கையை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேசங்களில் உள்ள நில்வலா ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இந்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆறுகளின் நீர்மட்டப் பகுப்பாய்வின்படி, அடுத்த 03 முதல் 24 மணித்தியாலங்களுக்கு மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.