போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டிலிருந்து தப்பியோட்டம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெரோம் இன்று அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.