யானைக்கு இரையானதா மொட்டு?
அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அமைச்சர்கள் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு சென்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் அரசாங்கப் பதவிகளைப் பெற்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் கட்சித் தலைமையகத்திற்குச் சென்றதாகவும், பின்னர் அவர்கள் செல்லவில்லை என்றும், மேலும் சிலர் பதவிகளைப் பெற்ற பின்னர் கட்சித் தலைமையகத்திற்குச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் பொஹொட்டுவவில் அரசியல் விவகாரங்களில் இருந்து விலகி இருப்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அதிக தொடர்புகளை வைத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.