மூன்று விபத்துக்களில் மூவர் பலி

நுவரெலியா, காலி, ஜா-எல ஆகிய பகுதியில் இடம்பெற்ற வெவ்வேறு மூன்று விபத்தில் மூவர் பலியாகி உள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

14ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பில் தெரியவருவதாவது,

நுவரெலியா

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகல பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளின் சாரதி, முச்சக்கரவண்டியில் மோதி, பஸ்ஸின் சில்லில் நசுகுண்டு உயிரிழந்துள்ளான்.

மோட்டார் சைக்கிள், முன்னால் சென்றுகொண்டிருந்த பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் சாரதி, பின்னால் வந்த பஸ்ஸின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை (14) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பதுளையைச் சேர்ந்த ரவிந்து மிச்சக ரத்நாயக்க (வயது 26) எனப் பொலிஸார்