மோசமான 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை?

மோசமான 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசியாவின் மிக மோசமான ஏழ்மையான 20 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.உலகின் பிரபலமான பொருளாதார ஆய்வு மற்றும் தகவல் இணையத்தளமான யாகூ பினான்ஸ் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆசியாவின் மிக ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இலங்கை 17வது இடத்தில் உள்ளது.முதலாம் இடத்தில் வடகொரியாவும், இரண்டாம் இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளன. சார்க் நாடுகளில் இலங்கை தவிர பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இருந்தே இலங்கை இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.