கற்பிட்டியில் பீடி இலைகளை கடத்திச் செல்லமுற்பட்ட சிலர் தப்பியோட்டம். பெருந்தொகையான பீடி இலைகள் பரிமுதல்..!

புத்தளம் கற்பிட்டி பகுதியிலிலுருந்து பீடி இலைகளை வானில் கடத்கிச் செல்வதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ள சுற்றிவளைப்பில் வானை நிறுத்திவிட்டு பீடி இலைகளை கைவிட்ட நிலையில் தப்பியோடியுள்ளனர்.

இதன்போது வானில் மறைத்து வைத்திருந்த 630 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகள் கற்பிட்டி பாலக்குடா பகுதியில் நேற்று இரவு கைப்பற்றப்பட்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளுடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வானையும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.