இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்ட பிறகு, அந்தப் பதவி டிரெவர் பேலிஸூக்கு கிடைத்துள்ளது.

இவர் இலங்கை அணிக்கு ஏற்கனவே 4 வருடங்கள் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது தான் ஜெயவர்த்தனே அணித்தலைவராக இருந்தார்.

இங்கிலாந்து அணியில் இவரது பணி தொடர்பாக ஜெயவர்த்தனே கூறுகையில், டிரெவர் பேலிஸூக்கு என்ன செய்தால் சிறப்பாக இருக்கும். அதை அணிக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.

இங்கிலாந்து அணியில் சிறந்த இளம் வீரர்கள் உள்ளனர். எனவே சரியான தருணத்தில் இவர் பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது பயிற்சியில் இங்கிலாந்து மீண்டும் பழைய நிலைக்கு வரும். பல பயிற்சியாளர்கள் இருந்தாலும் டிரெவர் பேலிஸூன் சாதனைகள் அவரை பற்றி சொல்லும் என்று கூறியுள்ளார்.