
லசித் மாலிங்க போன்று பந்துவீசும் சிறுவனுக்கு புதிய வாய்ப்பு கிட்டியது..!
சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க போன்று பந்து வீசும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது.
இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
வீரவில பகுதியை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் தினித் என்ற சிறுவனே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,சிறுவனின் திறமையை பாராட்டி சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தரவுள்ளதாகவும்,மற்றுமொரு சிறந்த பாடசாலையில் சேர்க்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதன்படி, தெபரவெவ தேசிய பாடசாலைக்கு சிறுவன் வரவழைக்கப்பட்டு மூத்த வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மாலின் பயிற்றுவிப்பாளர் முன்னிலையில் பந்து வீசியுள்ளார்.
இதன்போது குறித்த சிறுவனின் பந்து வீச்சினை பார்த்து தான் ஆச்சரியமடைந்ததாக சுரங்கா லக்மாலின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.