ஆளுங்கட்சி எம்.பிக்களின் விஷேட குழு கூட்டம்; வெளிநாடு செல்லாதீர்கள் – ரணில் உத்தரவு!

ஆளுங்கட்சி எம்.பிக்களின் விஷேட குழு கூட்டம்; வெளிநாடு செல்லாதீர்கள் – ரணில் உத்தரவு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  

எதிர்வரும் 28ஆம் திகதி ஆளும் கட்சியின் விசேட குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களின் பங்கேற்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி மற்றும் அந்த வார இறுதியில் கொழும்பில் தங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, ஆளும் கட்சியின் எந்தவொரு அமைச்சரும் அந்த வார இறுதியில் வெளிநாடு செல்ல வேண்டாம் எனவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பல விசேட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பிலேயே தங்கியிருக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.