நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைப்பு..!

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைப்பு..!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டரொன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 328 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 பெற்றோல் லிட்டரொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 365 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 308 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 346 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.