சாப்பிட்டு விட்டு பணம் தராவிட்டால்..? சுடுநீரை முகத்தில் வீசுங்கள் – சிற்றூண்டிச்சாலை சங்கம்..!
உணவு உண்டு விட்டு கட்டணத்தை செலுத்த மறுப்பவர்களை சோறு தாளிக்கும் பாத்திரத்தைக் கொண்டு தாக்குங்கள் அல்லது கொதிநீர் மற்றும் கழிவு நீரால் ஊற்றுங்கள்,
என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
பழம்பெரும் பாடகர் சமன் டி சில்வா உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டிக்கும் போதே அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் இவ்வாறு தெரிவித்தார்.