முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு – 11 முக்கிய விடயங்கள் பேச்சு, Dr ஷாபி, சட்டத்தரணி ஹிஸ்புல்லா பங்கேற்பு..!
– அன்ஸிர் –
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முஸ்லிம் தரப்பினருக்கும் இடையிலான் முக்கிய சந்திப்பொன்று இன்று புதன்கிழமை 5 ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
ஆசாத் சாலியின் ஏற்பாட்டில், பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ளது.
இதன்போது இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கான தீர்வு முக்கிய பேச்சு விவகாரமாகியுள்ளது.
இதற்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி ரணில் தான் இந்தியாவுக்கு சென்றுவந்த பின்னர், இவ்விவகாரத்தை உடனடியாக கவனம் எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முஸ்லிம் சமய விவகார கட்டிடத்தை பௌத்த அமைச்சு கபளீகரம் செய்தமை, இஸ்லாமிய பாடப்புத்தக விவகாரம், முஸ்லிம் அரச அதிகாரிகளின் உள்ளீர்ப்பு, காணி விவகாரம் உள்ளிட்ட மற்றும் பல விடயங்கள் உரையாடப்பட்டுள்ளன.
இதில் பலவற்றுக்கு சாதகமான பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி மேலும் சில விடயங்களை கையாள்வதற்காக தனது செயலாளருக்கு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தகதுடன், எதிர்வரும் வாரங்களில் மற்றுமொரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும் ஜனாதிபதி இதன்போது இணக்கம்.