நோயாளிகள் சந்தேகமான முறையில் இறப்பது மயக்க மருந்தின் தாக்கத்தினாலா?

நோயாளிகள் சந்தேகமான முறையில் இறப்பது மயக்க மருந்தின் தாக்கத்தினாலா?

சத்திரசிகிச்சையின் போது நோயுற்ற பெண்ணொருவர் தேசிய கண் வைத்தியசாலையில் உயிரிழந்தமையும் பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்தமையும் மயக்க மருந்தின் விளைவுகளாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் ஏற்படும் சாதாரண மரணங்கள் கூட தரக்குறைவான மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளால் ஏற்படுவதாக சமூகத்தில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அந்த சந்தேகம் நியாயமாகி வருவதாகவும் மருத்துவர் மேலும் குறிப்பிடுகிறார்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்குள் வருவது, மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் மருந்துகளை ஆய்வுக்கூட பரிசோதனைகள் இன்றி வெளியிடுவது, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தரம் குறைந்தவை என சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டமை ஆகியன மக்கள் மனதில் பதியாமல் இல்லை எனவும் வைத்தியர் மேலும் மேற்கோள்காட்டி தெரிவித்திருந்தார்.

தற்போதைய சுகாதார நிர்வாகத்திற்கு நோயுற்றவர்களின் உயிருடன் விளையாடுவதற்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்த வைத்தியர் சமல் சஞ்சீவ, வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ள சுகாதார அமைப்பு தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.