பிக்குகள் வன்முறைகள் ஈடுபட்ட போது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?
பௌத்த குருமார்களின் செயற்பாடுகள் குறித்து வெளியாகும் வீடியோக்கள் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது கருத்தினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது
கடந்த காலங்களில் பௌத்த மதகுருமார்கள் பொதுமக்களிற்கு எதிராக அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஏன் பொலிஸாருக்கு வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் வீடியோக்களில் பதிவாகியுள்ளன, அவர்களிற்கு எதிராக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளும் வெளியாகியுள்ளன.
ஆனால் இது குறித்து சிறிதளவு சீற்றமும் வெளியாகவில்லை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இது பௌத்தகுருமாருக்கு ஒரு விடுபாட்டுரிமை குறித்த நம்பிக்கையை வழங்கியுள்ளது.
வீடியோக்களில் காணப்படும் நடவடிக்கைகள் சிறுவர்களிற்கு எதிரானவையாக காணப்பட்டால் விருப்பத்துடன் இடம்பெறாவிட்டால் அவை சட்டவிரோதமானவை.
அப்படியில்லாவிட்டால் – அது மதவழக்காறுகள் மரபுகளிற்கு முரணாணது- ஆனால் குற்றமில்லை.
இந்த சம்பவங்களை பொதுமக்கள் கையாளும் விதம் நாங்கள் விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சமூகமாக செயற்படவில்லை வன்முறைகளே எங்கள் முதல் வெளிப்பாடுகள் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இது சில நபர்களுக்கு எதிரான சில வகையான வன்முறைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள சமூகம்.
தாங்கள் போதிப்பதற்கு எதிரான விதத்தில் மதகுருமார்கள் நடந்துகொள்ளும் பாசாங்குத்தனம் வேறு விடயம்.
மதம் அல்லது மததலைவர்களை தனியாக வைத்திருக்கவேண்டும், அவர்கள் அரசாங்கத்தின் கொள்கை அல்லது செயற்பாடுகள் மீது தாக்கம் செலுத்த அனுமதிக்ககூடாது.