“காகம் ஒன்று ஜனாதிபதியை கொத்த ஆரம்பித்துள்ளது..”
காகம் ஒன்று ஜனாதிபதியை தாக்க ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி எடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அவர் முட்டுக்கட்டை போடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனி தியேட்டர் சந்தியில் எமது நாடு – உங்கள் பொறுப்பு என்ற தலைப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துகளை தெரிவித்த மேர்வின் சில்வா;
“எல்லா கட்சிகளிலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளனர். திருட்டும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றன. எங்களுக்கு அங்கே கவலை இல்லை. நாட்டை உருவாக்கும் சிலரைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் எனக்கு எனது குடும்பம் என்ற நிலைப்பாட்டில் உள்ளானவர்கள்.
மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்தவுடனேயே அவரது குடும்பம் பணம் சம்பாதிப்பதற்கும், திருடுவதற்கும், கப்பம் கோருவதற்குமான வழிகளை திறந்தது. அந்தக் குடும்பத்தில் அதற்குச் சரியானவர் ஒருவர் இருந்தார். பசில் ராஜபக்ஷ ஒரு அப்பட்டமான திருடன். எனக்கு எதிராக வழக்குப் போடு, நான் நீதிமன்றத்திற்கு வரத் தயார்.
நாம் ஒன்றாக பெலியத்தவில் எங்கள் வீட்டில் இருந்தோம். கோட்டாபயவிற்கு ரபக்ஷ தாக்கப்பட்ட போது, தாக்கியவர்களை நாமே தாக்கினோம். அவன் ஒரு கோழை, பயப்படாமல், தைரியம் இருந்தால், ஜனாதிபதி பதவியை விட்டு ஓடிப் போக மாட்டீர்கள். கோட்டாபயவிற்கு இன்று கர்மாவின் விளையாட்டில் செல்ல இடமில்லை.
இவர்கள் அனைவரும் பொதுச் சொத்தை சுரண்டினார்கள். இவர்கள் அடுத்த ஆத்மாவில் காக்கை நாய்களாக பிறக்கப் போகிறார்கள். இப்போது மைத்திரிபால யாழ்ப்பாணம் சென்று பிரபாகரன் இறந்துவிட்டாரா என்று கேட்கிறார். எனக்கு ஞாபகம் இல்லை. தெரியாதாம்… மைத்திரிபாலவின் தந்தை வீட்டில் இல்லாத போது சுருட்டு விற்கும் ஒருவர் வீட்டிற்கு வந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய நண்பர்களுக்கு நான் கூறுகின்றேன், தேன் கொட்டி அழுத்தப்படும் மரங்கள் காய்க்காது. அங்கிருந்து வெளியேறி வாருங்கள்.
ஒவ்வொரு கட்சியிலும் வேலை செய்யக்கூடிய முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். பசில் எனும் காகம் ஜனாதிபதியின் பணியை சரியாக செய்ய விடுவதில்லை. காலால் இழுக்குறார், பொறிகளை வைக்கிறார். நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன், பார்த்திருந்தது போதும், எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் மகனாக, வந்து உங்கள் ஜனநாயகத்தை சொல்லுங்கள். அன்று நான் அவருடன் இருப்பேன்.
இந்த நாடு வீழ்ந்து அநாதரவாகிப் போனபோது, நாட்டைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மூத்த அரசியல்வாதியான ஜனாதிபதிதான் அப்போது முன் வந்தார். ஜனாதிபதி பதவிக்கு வரச் சொன்னபோது சஜித் ஒளிந்து கொண்டார்.
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. உள்ளூர் இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்காமல் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அதற்கு பொதுமக்கள் உட்பட அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த நாட்டில் விடுமுறை நாட்களை ஒழித்துவிட்டு வேலை செய்யும் இடமாக மாற்ற வேண்டும்.
அமைச்சர்கள் அனைவரும் களத்தில் பணியாற்ற வேண்டும். நாட்டில் இலாபம் ஈட்டும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பொறுப்பை ஏற்று உள்ளூர் பணக்கார வணிகர்களை ஒரே மேசைக்கு அழைத்து, அவற்றை மேம்படுத்த திறந்த டெண்டர் முறை மூலம் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இல்லையேல் புலம்பெயர் உறவினர்கள் அல்லாத பிரபாகரனின் உறவினர்கள் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பதவியை விட்டு வெளியேறிய ஜனாதிபதிகளுக்கு அதிக வசதிகள் கொடுக்கப்படக்கூடாது. நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக பாராளுமன்ற முறைமை மீளமைக்கப்பட வேண்டும். இது குறித்து எந்த ஜனாதிபதியும் பேசவில்லை” என்றார்.