பிரித்தானிய அழகுக்கலை நிபுணர் ஒருவர், இஸ்லாமியர்களை எனது அழகு நிலையத்தில் நுழையவிட மாட்டேன் என்று முகநூலில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் Blinks of Bicester என்ற பெயரில் அழகுநிலையம் நடத்திவரும் 47வது பெண்மணி ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் 3 பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளார்.
முதல் பதிவாக, பாரீஸில் நடந்த தாக்குதலின் காரணமாக, இனிமேல் எனது அழகுநிலையத்தில் இஸ்லாமி வாடிக்கையாளர்களை அனுமதிக்கமாட்டேன்.
இரண்டாவது பதிவாக, பிரித்தானிய குடிமக்களுக்கு மட்டுமே எனது அழகுநிலையத்தில் அனுமதி உண்டு.
மூன்றாவது பதிவாக, எனக்கு தெரியும் உங்கள் குடும்பங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிதைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவால் முகநூல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர், இவரின் இந்த பதிவு இனவெளியை தூண்டுவதாக உள்ளது எக்கூறிய Thames Valley பொலிசார், பொது ஒழுங்கு சட்டம் பிரிவு 19 கீழ் இவரை கைது செய்துள்ளனர்.
தற்போது அவரது பதிவுகள் அனைத்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டுள்ளன.