(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதார துறையை பலவீனப்படுத்தியமைக்காக அமைச்சருக்கு எதிராக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது குறித்து கட்சி ஆராய்ந்து வருகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.