1000 ரூபாவால் குறைவடையும் பண்டி உரம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாளை (15) முதல் 50 கிலோ கிராம் ‘பண்டி’ உரம் எனப்படும் MOP உர மூட்டை ஒன்றின் விலை 1000 ரூபாவால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.