சூடானில் குப்பைகள் போல் கொட்டப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்..!
சூடானில் அந்நாட்டு இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையில் அண்மைக்காலமாக நடக்கும் போர் மற்றும் வன்முறைகள் குறித்த தகவல்களை அறிந்திருப்பீர்கள்.
ஆனால் அவ்வாறு நடக்கின்ற போரினால் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படும் அப்பாவி பொது மக்களின் நிலைதான் அங்கு வேதனையான விடயமாக மாறியுள்ளது.
இன்னொரு பக்கம் இராணுவங்களுக்கிடையிலான இந்த போர் காரணமாக அந்நாட்டில் உள்ள பல குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அவ்வாறு சூடானின் மேற்குப்பகுதியான டார்பூரில் இருந்து நாட்டை விட்டு வெளியேர முயட்சிக்கும் (மாலிம் என்ற நபர். அவரின் பாதுகாப்புக்காக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக பீ.பீ.சி தெரிவித்துள்ளது) தனது கண்ணால் கண்ட விடயங்களை ஆதாரங்களுடன் வழங்கியுள்ளார்.
“என்னுடன் பணிபுரிந்த பலரது உடல்களை நான் புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். நான்தான் அதனை புகைப்படம் எடுத்தேன் என்பதை கண்டால் அல்லது அறிந்தால் என்னையும் கொன்றுவிடுவார்கள். நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், தெருக்களில் இருந்து சடலங்களை அகற்றி, அவற்றை அடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.”
மாலிம் என்ற நபர் காட்டிய அந்த புகைப்படங்களின் படி பல உடல்கள் பொலித்தீன் மற்றும் போர்வைகளால் மூடப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் டசன் கணக்கான அப்பாவி முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் லொறிகளில் கொண்டுவரப்பட்டு குப்பைகள் போல் கொட்டப்படுகின்றன.
ஆனால் ஜனாஸாக்களை சரியான முறையில் கபனிட்டு தொழுகை நடத்தி அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும் ஆர்.எஸ்.எப் என்ற துணை இராணுவம் அதனை மறுத்துள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டு குப்பைகளாக வீசப்படும் உடல்கள் யாருடையது என்றோ அல்லது எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்றோ யாருக்கும் தெரியாது. ஆனால் நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் இளைஞர்கள் மற்றும் ஏனையவர்களை குறி வைத்து அந்நாட்டு துணை இராணுவம் தாக்குதல் நடத்துகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரபிகள் அல்லாத மசலித் என்று அழைக்கப்படும் இனத்தை சேர்த்த பலர் இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்படுவதாக குடும்ப உறுப்பினர்கள் கூறுவதாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.