ஜனாதிபதி ரணில் உயிருக்கு ஆபத்து?

ஜனாதிபதி ரணில் உயிருக்கு ஆபத்து?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்ற சர்வதேச நிதி ஒப்பந்த மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டார். இந்தப் பயணத்தை முடித்துவிட்டு இன்று நாட்டிற்கு மீண்டும் திரும்ப உள்ள நிலையில் இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதிக்கு குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிநவீன துப்பாக்கி மூலமோ, வேறு வடிவிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செல்லும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட ரகசிய தகவலை ஊடகத்திற்கு பகிரப்பட்டது எப்படி என விசாரணை நடத்தப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.