மருந்து ஒவ்வாமையால் மற்றொரு மரணம்..!
கேகாலை வைத்தியசாலையில் இருந்து நுண்ணுயிர் எதிர்ப்பியை (Antibiotic) பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன் பின்னர் அவருக்கு 13 நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட்ட நிலையில், 14வது நுண்ணுயிர் எதிர்ப்பி கொடுத்ததால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.