சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் – ஹரின்..!

சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் – ஹரின்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனு எதிர்வரும் காலங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியானதும், சில பெரிய மாற்றங்களை பொதுமக்கள் பார்க்கலாம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார். அதற்குப் பதிலாக கடந்த ஆண்டு தேர்தலின் போது அவர் செய்ததைப் போல டலஸ் அழகப்பெருமவின் வேட்புமனுவுக்கு ஆதரவளிப்பார்.

சஜித் பிரேமதாச மீண்டும் தேர்தலில் தோல்வியடைய முடியாது, எனவே அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்.

நாட்டைக் காப்பாற்ற கடந்தாண்டு ரணில் விக்ரமசிங்க முன்வந்தார் என்பது மக்களுக்குத் தெரியும்.  கடந்த ஆண்டிலிருந்து கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்லவும், நீண்டகால மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மேடையை அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முடியும் என தெரிவித்துள்ளார்.