“அடுத்த அரசாங்கத்தை நாமே அமைப்போம்” – நாமல்..!

“அடுத்த அரசாங்கத்தை நாமே அமைப்போம்” – நாமல்..!

“பொதுஜன பெரமுன என்பது இந்த நாட்டில் அரசாங்கத்தை உருவாக்கும் சக்தியாகும். பொதுஜன பெரமுனவில் உள்ள நாங்கள் நிச்சயமாக அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் சக்தியாக மாறுவோம்..” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்;

“.. தேர்தல் நெருங்கும்போது தான் அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். நாங்கள் எங்கள் கட்சியை அங்கு அழைத்துச் செல்வோம். தேர்தல் காலத்தில் தான் கூட்டணி குறித்து பேசப்படும்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எமது பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து முடிவெடுப்போம். இந்த நேரத்தில், இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

சஜித் பிரேமதாச வந்து ஆதரவளிக்காவிட்டால், அல்லது அனுரகுமாரவின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து ஆதரவளிக்கவில்லை என்றால், பொஹொட்டுவவை ஆதரிக்காவிட்டால் இந்த நாட்டின் கதி என்ன.

ஒரு விஷயத்தை தெளிவாக்குவோம். இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். இந்த விடயத்தில் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லாத நிலையில் நாட்டை அரசியல் ரீதியாக சீர்குலைத்தால் நாடு எங்கே போகும்?

அப்படி நடந்தால் அந்த போராட்டம் என்ற போர்வையில் இந்த நாட்டை சீர்குலைக்க காத்திருப்பவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவது போலாகிடும். இது ஒரு ஜனநாயக நாடு என்று நாங்கள் நம்புகிறோம்.

தேர்தல் அரசாங்கத்தின் நிதி நிலைமை நியாயமான சூழ்நிலைக்கு மாற வேண்டும். அதுவரை அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும்.

நான் எப்பொழுதும் கூறுவது போல் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முதலாளித்துவ வர்க்க பொருளாதாரக் கொள்கைகளின் பலன்களை எமது மக்களுக்கு வழங்குவதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம்…”