
உம்றா செல்ல பாஸ்போட் எடுத்துவிட்டு வீடு செல்லும் வழியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!
தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் கஹடகஸ்திகிலிய
SAM கொமினிகெசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா (கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியர் அவர்களின் சகோதரர் ) அவர்கள் மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் வாகன ட்ரைவர் உட்பட நான்கு பேர் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்😭🥺💔
உம்றா செல்வதற்காக பாஸ்போட் செய்வதற்காக கொழும்புக்குச் சென்று திரும்பி வரும் வழியில் இரவு 11:30 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி ஒன்றுடன் குறிப்பிட்ட வேன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
உயிரிழந்தவர்கள் 33, 36, 43,46 வயதுடையவர்கள் என தெரிவிக்க படுகிறது.
ஏனைய விபங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.