திருகோணமலை சீனங்குடாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி..!
திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் பயிற்றுவிற்பவரும் பயிற்சியாளருமே உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (07) இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படையின் சீனக்குடாவில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT 6 ரக விமானமே 11:27 மணியளவில் விபத்துக்குள்ளானது.