விபத்துக்குள்ளான குட்டி விமானம், பயிற்சிக்குப் பயன்படுத்துவதற்கு பதிலாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டியவை – தயாசிறி..!
PT-6 ரக விமான விபத்துகளால் இதுவரையில் 6 விமானிகள் பலியாகியுள்ளதுடன், 1958 இல் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் ஏன் இன்னும் பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.
”இந்த பழைய ரக விமானங்களைத் தற்காலத்தில் பயன்படுத்துவதற்கான எதுவித காரணமும் இல்லை அத்துடன் இது வருந்தத்தக்கது. இந்த விமானங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்துவதற்கு பதிலாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டியவையாகும்” என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Kfir போர் விமானங்களின் பழுதுபார்க்கும் பணிக்காக அரசாங்கம் 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது. அதேவேளையில் PT-6 ரக விமானங்களின் விலை 0.75 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே.செலவு செய்துள்ளது
இவ்வாறான வருந்தத்தக்க மற்றும் தேவையற்ற சம்பவங்களுக்கான பொறுப்பை யார் ஏற்பது என அவர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.