துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, தேர்தல் காலப்பகுதியில் விநியோகிக்கக் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார்
39 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஒரு தொகை சேலைகளை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.