சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் நாம் தயார் – சஜித்..!
அரசாங்கத்தால் பேச முடியாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச தயார்
இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றால் அந்த பேச்சுவார்த்தையில் தலையீடு செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்திருந்தால் அது நாட்டுக்கு நலனை ஏற்படுத்தியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உடனடியாக இணக்கம் தெரிவித்த காரணத்தினால் தொழில்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.