களனி மாணவிகளின் பாலியல் ஆசைகள் குறித்து தகவல் கோரிக்கை செய்த நபரை அடையாளம்கான கூகுளுக்கு நீதிமன்ற உத்தரவு..!

களனி மாணவிகளின் பாலியல் ஆசைகள் குறித்து தகவல் கோரிக்கை செய்த நபரை அடையாளம்கான கூகுளுக்கு நீதிமன்ற உத்தரவு..!

பெண்களின் மிகவும் தனிப்பட்ட பாலியல் நடத்தை மற்றும் அணுகுமுறைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக களனி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கூகுள் படிவம் தயாரிக்கப்பட்டு இணையத்தில் விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதன்படி, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்த கூகுள் படிவத்தை உருவாக்கியவரை அடையாளம் காண்பதற்கான தகவல்களை வழங்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவில் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மூலம் இந்தப் படிவம் உருவாக்கப்பட்டு, பெண்களின் பாலியல் நடத்தை, அணுகுமுறை குறித்த தகவல்களைப் பெறுவது என்ற போர்வையில் போலி ஆவணங்கள் மூலம் வாட்ஸ்அப் நெட்வொர்க் மூலம் பல்கலைக்கழக மாணவிகளுக்கு ஏராளமானோருக்கு அனுப்பப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.