களனி பல்கலைக்கழக மாணவர்கள் பிரதம நிர்வாக கட்டடத்தை சுற்றி வளைப்பு

21 கோரிக்கைகளை முன்வைத்து களனி பல்கலைக்கழக மாணவ சங்கத்தினர் பிரதம நிர்வாக கட்டடத்தை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதம நிர்வாக கட்டடத்திற்கு அதிகாரிகளை பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ மாணவர்கள் சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.